Our Feeds


Friday, July 7, 2023

ShortNews

பாடசாலை மாணவியின் மர்ம மரணம் - சந்தேக நபர்களுக்கு நீதி மன்றம் இன்று வழங்கிய உத்தரவு




பாடசாலை மாணவியின் மர்ம மரணம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 21ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



களுத்துறை பிரதான நீதவான் திருமதி நிதா ஹேமலி ஹல்பண்தெனிய இன்று (07) இந்த உத்தரவை பிறப்பித்தார்.


களுத்துறை நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 5 மாடி கட்டிடத்தில் ஜன்னல் வழியாக விழுந்து 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் கடந்த மே மாதம் 6 ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.


ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து சிறுமி வீழ்ந்த போது அறையில் இருந்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபர், அவருடன் விடுதிக்கு சென்றதாக கூறப்படும் களுத்துறை வடக்கை சேர்ந்த 23 வயது இளைஞர் மற்றும் களுத்துறை நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இதேவேளை, களுத்துறை பிரதேசத்தில் மேலதிக வகுப்பில் கலந்து கொண்ட மாணவிகள் குழுவொன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


அவர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »