Our Feeds


Thursday, July 13, 2023

SHAHNI RAMEES

சஜித்தின் வேண்டுகோளின் பேரில் பாராளுமன்றில் பலஸ்தீன் தொடர்பான விவாதம்

 


பலஸ்தீன மக்கள் தற்போது எதிர்நோக்கும் அவலங்கள் தொடர்பில் பலஸ்தீனின் நட்பு நாடான இலங்கை எதுவித நிலைப்பாட்டையும் வெளியிடாத நிலையில் இது தொடர்பிலான பாராளுமன்ற விவாதமொன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.



சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம் பாராளுமன்ற நடடிக்கைகள் குழு கூடிய வேளையில் எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற சபை ஒத்திவைப்புப் பிரேரணையாக விவாதிப்பதற்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.



எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் இந்த விவாதத்துக்கென பிற்பகல் 1.30 முதல் 5.30 வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.



எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உரையுடன் ஆரம்பமாகவுள்ள இந்த விவாதத்தைப் பார்வையிடுதற்காக இலங்கை-பலஸ்தீன் பாராளுமன்ற நட்புறவுச் சங்க உறுப்பினர்கள், இலங்கையில் உள்ள அரபு நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் எனப் பலரும் வருகை தரவுள்ளனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »