கொழும்பு தேசிய வைத்தியசாலையை சூழவுள்ள வீதிகளில் அதிக வாகன நெரிசல் மற்றும் வைத்தியசாலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் ஊழல்களை கட்டுப்படுத்தும் வகையில் வைத்தியசாலைக்குள் பொலிஸ் நிலையத்தை அமைக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலை நிர்வாகம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நாளொன்றுக்கு சுமார் 15,000 பேர் வருகை தருவதாக கூறும் வைத்தியசாலை நிர்வாகம், சில பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்ட தற்போதைய பொலிஸ் நிலையம் மக்களையும் சுற்றுப்புற மக்களையும் கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் வைத்தியசாலையில் பொலிஸ் நிலையம் அமைக்குமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் டிரண் அலசிடம் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
வைத்தியசாலையை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் கடமை நேரங்களில் அதிக வாகன நெரிசல் இருப்பதால் நோயாளிகளின் சிகிச்சைக்கு இடையூறாக இருப்பதாகவும், இது குறித்து பொலிஸாருடன் கலந்தாலோசித்து வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகாமையில் சில வாடகை வாகனங்கள் தொடர்ந்தும் வீதிகளை மறித்து செயற்படுவதாகவும் வீதி கடமையில் ஈடுபடும் அதிகாரிகள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென வைத்தியசாலை நிர்வாகம் மேலும் குறிப்பிடுகின்றது.
.jpg)