Our Feeds


Wednesday, July 5, 2023

SHAHNI RAMEES

BREAKING: ராகலை லயன் தொகுதியில் தீ பரவல்..!

 

               

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை கீழ் பிரிவு தோட்டத்தில் உள்ள லயன் தொகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இத் தோட்டத்தின் 20 குடியிருப்புகள் அடங்கிய இரண்டு பகுதிகளை கொண்ட இலக்கம் (06) தொடர் லயன் தொகுதியில் இன்று(05) காலை 10.30 மணியளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ள .அதேநேரத்தில் இராகலை பிரதேசத்தில் கடும் காற்றுடன் மழையும் பெய்து வருகிறது.

 

குறித்த தீ விபத்து சம்பவத்தில் 20 குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

தீயை கட்டுப்படுத்த தோட்ட மக்கள் போராடி வருவதாகவும், நுவரெலியா மாவட்ட தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில் தோட்ட இளைஞர்கள் தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

(ஆ.ரமேஸ்)


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »