வில்வத்த புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தினால் புகையிரத திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை மீட்பதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் வஜிர சமன் பொல்வத்த தெரிவித்தார்.
அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவித்த அவர், புகையிரத விபத்தினால் திணைக்களத்திற்கு ஏற்பட்ட இழப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
விபத்தினால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடுவதற்கு இரத்மலானை பொறியியல் பிரிவைச் சேர்ந்த பொறியியலாளர்கள் அடங்கிய குழுவொன்று செயற்படும் எனவும், அது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ரயில் விபத்தினால் திணைக்களத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை கன்டெய்னர் கார் உரிமையாளரிடமிருந்தோ அல்லது சாரதியிடமிருந்தோ மீட்டுத்தர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.