குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவவுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 12ம் திகதி காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை அவமதிக்கும் வகையில் பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களில் அவர் பதிவுகளை மேற்கொண்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.