கொஸ்கம பகுதியில் இன்றிரவு பயணிகள் பஸ் ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பஸ் ஒன்றின் மீதே மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
கொஸ்கம – அளுத் அம்பலம பகுதியில் நிலவிய அதிக மழையையடுத்தே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக கொழும்பு – அவிசாவளை வீதியின் கொஸ்கம அண்மித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
