Our Feeds


Monday, October 30, 2023

ShortNews Admin

காஸா புறநகர் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் டாங்கிகள், புல்டோசர்கள் வெளியேற்றம்!



கடுமையான மோதல்கள் நடந்தமையினை அடுத்து – காஸா நகரின் புறநகர்ப் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் வெளியேறியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது என, அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.


பாலஸ்தீனப் போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்றன.


இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகரின் தெற்கு புறநகரில் நிலைகளை எடுத்துள்ள அதேவேளை, அவர்கள் மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ள பகுதியில் இருந்து கொண்டு, அவற்றை அகற்றி வருகின்றனர் எனவும் அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.


மேலும் தூரத்தில் குண்டு வெடிப்புச் சத்தங்களும், பலத்த துப்பாக்கிச் சூட்டுச் சத்தமும் கேட்டு வருவதாகவும் அல் ஜசீரா தெரிவிக்கிறது.


மறுபுறமாக ஞாயிற்றுக்கிழமை உதவிப் பொருட்களுடன் குறைந்தது 33 ‘ட்ரக்’கள் காஸாவுக்குள் நுழைந்தன. இதன்படி காஸாவுக்குள் உதவிப் பொருட்களுடன் 117 ‘ட்ரக்’கள் நுழைந்துள்ளன என்று ஐ.நா தெரிவித்துள்ளது.


காஸா மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதைத் தடுப்பது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பின் கீழ் – ஒரு குற்றமாகும் என்று, நீதிமன்றத்தின் உயர் வழக்கறிஞர், ரஃபா எல்லைக் கடவையை பார்வையிட்ட போது தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »