Our Feeds


Friday, October 27, 2023

ShortNews Admin

சிரியாவில் உள்ள ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்.



சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஈரான் இராணுவம் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்களின் இரண்டு நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.


ஈராக் சிரியாவில் உள்ள அமெரிக்க படையினரின் தளங்கள் மீது சமீபத்தில் ஆளில்லா விமானதாக்குதல்கள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்காவின்  பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.

ஈராக் சிரியாவில் உள்ள அமெரிக்க படையினரை பாதுகாப்பதற்காக இந்த துல்லிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க படையினருக்கு எதிரான ஈரான் ஆதரவு தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை அவற்றை உடனடியாக நிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சமீபத்தைய தாக்குதல்களில் தனக்கு தொடர்பில்லை என ஈரான் தெரிவிக்கின்றது  அதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ஆதரவு குழுக்களின் தாக்குதல்கள் தொடர்ந்தால் மேலதிக நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் உள்ள ஈரான் சார்பு குழுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களி;ன போது இஸ்ரேலுடன் இணைந்து செயற்படவில்லை இஸ்ரேலிற்கு அறிவிக்கவில்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் ஹமாஸ் இஸ்ரேல் மோதலுடன் தொடர்புடையவில்லை  இல்லை தனியான சம்பவம் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஈரானிற்கு தெளிவான செய்தியை வழங்குவதற்காக இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன ஈரான் தனது ஆதரவு குழுவினர் சிலவகையான நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்ற செய்தியை அவர்களிற்கு தெரிவிக்கவேண்டும் என பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களில் சிரியா ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 21 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர் என பென்டகன் தெரிவித்துள்ளது.

அவர்கள் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளனர் எனவும்  பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் இஸ்ரேல் மோதல்  ஆரம்பித்த பின்னர் ஈராக்கில் 12 தடவையும் சிரியாவில் நான்கு தடவையும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »