இஸ்ரேல் - ஹமாஸ் போராளிகள் இடையேயான போரில்
இரு தரப்பிலும் இதுவரை சுமார் 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அதேபோல் ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகள் பலஸ்தீனத்திற்கு ஆதரவு தருகின்றன.
இதற்கிடையே காசா நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதற்கு உலக நாடுகள் சில கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளன.
இந்நிலையில் நாட்டில் இடம்பெற்ற அனைத்து விளையாட்டுகள், கலாசார மற்றும் அரச நிகழ்ச்சிகளையும் இரத்து செய்வதாக அல்ஜீரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பலஸ்தீனத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
