யாழ்ப்பாணம், கோப்பாய் மத்தி கிராமத்தை சேர்ந்த 3
பெண்கள் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதையடுத்து குறித்த 23 பேரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் தமக்குள் முரண்பட்டுக் கொண்டு, தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்தனர். எதிர்தரப்பினரை தாக்குவதும், அவர்களின் வீடுகளை சேதப்படுத்துவதுமாக தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு கிடைத்த பல்வேறு முறைப்பாடுகளை தொடர்ந்து, கோப்பாய் பொலிசார் இன்று (8) சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியதையடுத்தே அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
