உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் குறித்த பகுதியை அண்மித்து வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வளவ ஆற்றின் இரு கரைகளிலும் அம்பலாந்தோட்டை பகுதியிலும் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
