Our Feeds


Tuesday, November 7, 2023

News Editor

’’தரம்குறைந்த டீசல் விநியோகிக்கப்படுகிறது”


 தரம் குறைந்த 40,000 மெற்றிக் தொன் டீசல் சந்தைக்கு வெளியிடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நவம்பர் 5 ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்த 40,000 மெற்றிக் தொன் டீசல் மாதிரிகள் தர பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாகவும் , கொலன்னாவையில் குறிப்பிட்ட டீசல் விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

டீசல் கையிருப்பின் மாதிரிகளில் இரண்டு LIOC ஆய்வக சோதனை அறிக்கைகளில் அவற்றின் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »