தரம் குறைந்த டீசல் சந்தைக்கு வெளியிடப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மறுத்துள்ளார்.
டீசல் கையிருப்பில் பிழையொன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்ற்றின் மாதிரிகள் இன்னும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவாறு டீசல் வெளியிடப்படவில்லை என்றும், மாதிரிகள் தர சோதனையில் தோல்வியுற்றால் அவை முற்றாக நிராகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தரம் குறைந்த டீசல் விநியோகிக்கப்படுவதாக பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டியதையடுத்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அவற்றை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
