சவுதி மன்னர் இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம்
சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ அலி சப்ரி அவர்களை நேற்று (08/11/2023) அமைச்சிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, சவுதி மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஃஊத் அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு அனுப்பி வைத்த கடிதமொன்றை அவர்களிடம் கையளித்தார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையிலான பொது நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கலாநிதி M H M அஸ்ஹர்
