(இஸ்லாத்தில் பெண்கள்) ஜித்தா சர்வதேச மாநாடு
சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் அவர்களின் ஆதரவின் கீழ், சவூதி அரேபியா, கடந்த (06-11-2023) திங்கட்கிழமை ஜித்தா நகரில் ‘இஸ்லாத்தில் பெண்கள்’ பற்றிய ஒரு சர்வதேச மாநாட்டை ஆரம்பித்து வைத்தது.
Organisation of Islamic Cooperation (OIC) இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மூன்று நாள் மாநாடு, முஸ்லிம் பெண்களின் வெற்றிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது, வளர்ச்சியில் அவர்களின் பங்கு மற்றும் பங்களிப்பை முன்னிலைப்படுத்துவது, இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் சந்தேகங்கள் மற்றும் தவறுகளுக்குப் பதிலளிப்பது மற்றும் இஸ்லாமிய போதனைகள் எப்போதும் பெண்களுக்கு நியாயமானவை என்பதை வலியுறுத்துவதே மாநட்டின் நோக்கமாகும்.
இம்மாநாடு ‘இஸ்லாத்தில் பெண்கள் பற்றி ஜித்தா ஆவணம்" என்ற தலைப்பில் ஒரு விரிவான ஆவணத்தை உருவாக்குவதுடன், நீதியை மேம்படுத்துவதற்கும் இஸ்லாமிய சமூகங்களில் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்;குவதற்கும், சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களை முன்மொழியும்; எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாடு (5) அமர்வுகளைக் கொண்டிருக்கும், அவற்றில் அமைச்சர்கள், அதிகாரிகள், அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் ‘பெண்களின் நிலை, இஸ்லாத்தில் அவர்களின் உரிமைகள், சமகால சமூகங்களில் காணப்படும் பெண்களுடன் தொடர்புபட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகள், கல்வி மற்றும் தொழில் துறையில் முஸ்லிம் பெண்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி விவாதிப்பார்கள். .
இம்மாநாடு தொடர்பாக சவுதி வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அவர்கள் மொரிட்டானியாவின் தலைநகரில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தின் 49 வது அமர்வின் தொடக்க அமர்வில் தனது உரையில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (கலாநிதி எம். எச். எம் அஸ்ஹர்)
