Our Feeds


Wednesday, November 8, 2023

ShortNews Admin

PHOTOS: சுதந்திர பாலஸ்தீனம் வேண்டும், இன அழிப்பு உடன் நிறுத்தப்பட வேண்டும் - கொழும்பு சமாதான மாநாட்டில் மொத்தமாக திரண்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள்



பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தியும், பாலஸ்தீன அப்பாவிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித் தனமான இன அழிப்பை நிறுத்தக் கோரியும் கொழும்பில் We are one அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தேசிய சமாதான மாநாடு” நேற்று மாலை கொழும்பு, ஹைட் பார்க்க மைதானத்தில் நடைபெற்றது.


கொட்டும் மழையிலும் திரண்டிருந்த பெரும் மக்கள் கூட்டத்தில் பௌத்த, இந்து, கிருஸ்தவ, இஸ்லாமிய மத குருமார்கள், அனைத்து கட்சிகளின் தலைவர்கள் அனைத்து இன, மதங்களை சேர்ந்த பொதுமக்கள், ஆளும், எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப் படுத்திய தலைவர்கள் என பெருந்திரலான மக்கள் பங்கெடுத்தனர்.


இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில்,


முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிரிசேன MP, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ கணேசன் MP, ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி ஷம்பிக்க ரணவக்க MP, SJB, MP க்களான வேலுகுமார், இம்ரான் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான், எரான் விக்ரமரத்ன, சந்திம வீரக்கொடி, திஸ்ஸ அத்தநாயக்க, கபீர் ஹாஷிம், பௌசி, SLPP, MP காதர் மஸ்தான்,  NPP கட்சி சார்பில் விஜேத ஹேரத் MP, இலங்கை கம்பியூனிச கட்சியின் செயலாளர், இலங்கை பாலஸ்தீன நற்புறவுச் சங்கத்தின் தலைவர் பிமல் ரத்னாயக்க, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், மு.க MP ஹரீஸ், முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அஸாத் சாலி, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் சாணக்கியன் இராசமாணிக்கம் MP, NFGG கட்சித் தலைவர் அப்துர் ரஹ்மான், மவ்பிம ஜனதா கட்சி தலைவர் திலித் ஜயவீர, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் அர்க்கம் நூராமித், IDM பல்கலைக் கழக நிறுவனர் ஜனகன் விநாயகமூர்த்தி மற்றும் முஸ்லிம் சமூக பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத் தக்கதாகும்.


நிகழ்வின் இறுதியில் We are one அமைப்பின் முக்கியஸ்தர்களினால் பாலஸ்தீன சுதந்திர தேசம் வேண்டியும், அப்பாவிகள் மீதான இஸ்ரேலின் இன அழிப்பை நிறுத்தக் கோரியும் பிரகடனம் வெளியிடப்பட்டது. 














































Subscribe to this Blog via Email :
Previous
Next Post »