Our Feeds


Tuesday, November 14, 2023

ShortNews

VIDEO: பலஸ்தீன் மக்களுக்காக 157 MP க்களின் கையெழுத்தை திரட்டி ஐ.நா வில் ஒப்படைத்தார் ரிஷாத் பதியுத்தீன்



பாலஸ்தீன, காஸா அப்பாவி மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் இன அழிப்பை நிறுத்தக் கோரியும், காஸா மக்களுக்கான உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கக் கோரியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுத்தீன் தலைமையில் 157 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்கள் திரட்டப்பட்டது. 


குறித்த கையெழுத்துக்கள் அடங்கிய ஆவணங்கள் இன்று இலங்கைக்கான ஐ.நா தூதுவராலயம் மற்றும் இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவராலயம் ஆகியவற்றில் நேரடியாக கையளிக்கப்பட்டது. 


குறித்த நிகழ்வில் அஇமக தலைவர் ரிஷாத் பதியுத்தீன் MP, மற்றும் MP க்களான இஷாக் ரஹ்மான், ஹரீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »