ஐந்து வருடங்களின் பின்னர் களனி கங்கை ஆற்றுப்படுகையின் கலடுவாவ நீர்த்தேக்கம் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி கங்கையை அண்டிய பகுதிகளில் பெய்து வரும் அதிக மழை காரணமாக நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதாக தெரிவித்துள்ளது.
கலடுவாவ - லபுகம வனப் பகுதிக்குள் அமைந்துள்ள கலடுவாவ நீர்த்தேக்கம் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
