மஹியங்கனை - தெஹியத்தகண்டிய பிரதான வீதியின் கிராந்துருகோட்டை பிரதேசத்தில் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் மீட்கப்பட்ட போது அழுகிய நிலையில் இருந்ததால், சடலத்தை யாராவது அவ்விடத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு பாடசாலை மற்றும் பேபருந்து நிறுத்தமும் உள்ளதுடன் கருப்பு நிற பயணப்பையொன்றும் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதுடன், கிராந்துருகோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
