Our Feeds


Saturday, January 27, 2024

SHAHNI RAMEES

காஸாவில் 26 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை....!


 காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில்

உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தைக் கடந்துள்ளது.


இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று(26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 183 போ் உயிரிழந்தனா்; 377 போ் காயமடைந்தனா்.


இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 26,083-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 64,487 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »