Our Feeds


Tuesday, January 16, 2024

News Editor

முறையற்ற வகையில் வற்வரி அறவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை : பொதுமக்கள் முறையிடலாம்


 முறையான வழிமுறைகள் இல்லாமல் வற் (சேர் பெறுமதி) வரி அறவிடும் தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாக வற் வரி அறவிடும் உரிமை வியாபாரிகளுக்கு கிடையாது  என தேசிய இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தேசிய இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர குறிப்பிட்டதாவது,

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில வியாபாரிகள் பொருட்களின் விலை பட்டியலுடன் வற் வரியை நேரடியாக அறவிடுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில்  முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

முறையான வழிமுறைகள் இல்லாமல் வற் வரி அறவிடும தரப்பினருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாக வற் வரி அறவிடும் உரிமை வியாபாரிகளுக்கு கிடையாது.

ஆகவே இவ்வாறான முறையற்ற செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் இறைவரித் திணைக்களத்தின்     cgir@ird.gov.lk என்ற உத்தியோகப்பூர்வ மின்னஞ்சல் முகவரி ஊடாகவும், ஆணையாளர் நாயகம் தேசிய இறைவரித் திணைக்களம், சிற்றம்பலம், ஏ.கார்டினர் மாவத்தை கொழும்பு -02 என்ற முகவரி ஊடாக முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »