Our Feeds


Saturday, January 20, 2024

ShortNews Admin

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு கடும் எதிர்ப்பு: அரசியல்வாதிகள் எவரும் கிராமத்திற்குள் வரக்கூடாது



புத்தளம் தளுவ பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றுக்காக சென்ற நீர் வழங்கல் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பிரதேச மக்கள் வெளியிட்ட கடும் எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்.


இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 1 மணியளவில் நடந்துள்ளது.


ராஜாங்க அமைச்சர் தளுவ சந்தியில் இருந்த போது அங்கு சென்ற பிரதேசவாசிகள் சிலர் அவரை தமது கிராமத்திற்குள் வர வேண்டாம் என தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியிட்டனர்.


தமது கிராமத்தில் இதுவரை எவ்வித அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் வெள்ளத்தில் தமது பயிர்கள் கூட அழிந்த போது எந்த அரசியல்வாதியும் வந்து அது குறித்து தேடிப்பார்க்கவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.


இதனால்,எந்த அரசியல்வாதியும் கிராமத்திற்குள் வர இடமளிக்க போவதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளார்.


தளுவ நிர்மலபுர தேவாலயத்தின் கூட்டம் நடத்தும் மண்டபம் அரசியல்வாதிகளுக்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள பிரதேச மக்கள், மக்களுக்காக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்ய வேண்டும் என்ற தேவை இருந்தால், அதிகாரிகள் மாத்திரம் வரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த நிலையில், தளுவ சந்தியில் இருந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது வாகனத்தில் இருந்து இறங்கி வேறு வாகனத்தில் ஏறி தளுவ கிராமத்திற்கு செல்ல முயற்சித்தார்.


எனினும் கிராம மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர் திரும்பிச் சென்றுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »