அம்பாந்தோட்டை, குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்தை அண்மித்து கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, மற்றுமோர் இளைஞர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குடாவெல்ல கடலில் ஐவர் நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் குளிக்கச் சென்றபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.