Our Feeds


Saturday, February 24, 2024

SHAHNI RAMEES

மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்கலாம்...!

 

மின்கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார சபைக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து மின் கட்டணத்தை சபை உயர்த்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் மக்களிடம் பணம் அறவிடுவதன் மூலம் மின்சார சபை 60 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »