Our Feeds


Friday, March 22, 2024

SHAHNI RAMEES

வாகன விபத்தில் மாணவன் உயிரிழப்பு....!

  



கெக்கிராவ - கனேவல்பொல வீதியில் அம்குகஸ்வெவ

பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


 


கெக்கிராவ பெஸ்டியன் சில்வா வித்தியாலயத்தில் 6 ஆம் ஆண்டில் கல்வி கற்ற குசல யுகத் சஞ்சீவ என்ற 12 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


 


வீட்டின் ஒரே பிள்ளையான குறித்த உயிரிழந்த மாணவன், கெக்கிராவ நெல்லியாகம பகுதியைச் சேர்ந்தவர்.


உயிரிழந்த மாணவன் சிலகாலமாக தந்தையின் அன்பை இழந்துள்ள நிலையில் அவரது தாயாரும் சில காலத்திற்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் பாட்டியின் பராமரிப்பில் கல்வி கற்று வந்தவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »