Our Feeds


Saturday, April 27, 2024

ShortNews

"ரணிலுக்கு இடம் கொடுப்போம் நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் பேரணி" - மே தினத்தில் ஐ.தே.க களத்தில்



"ரணிலுக்கு இடம் கொடுப்போம் நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் பேரணி" இன்று (27) காலை கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரைக்கு அருகில் ஆரம்பமானது.


நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பயணிக்கும் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி மாளிகாவத்தையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு மாற்றப்படவுள்ளது.



ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தனவின் வழிகாட்டலின் கீழ் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த தேசிய இளைஞர் முன்னணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்களின் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெறவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »