Our Feeds


Tuesday, April 9, 2024

ShortNews

தேர்தலுக்கான வைப்பு கட்டணம் அதிகரிப்பு..!


 தேர்தலுக்கான பிணை வைப்பு கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.


ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைகள் சட்ட விதிகளின்படி, தற்போதைய பொருளாதாரப் பின்னணிக்கு ஏற்றவாறு பிணை வைப்பு கட்டணத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.


குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


கட்சியொன்றிலிருந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பிணை வைப்புத்தொகை 26 இலட்சமாகவும், சுயேட்சையாக ஜனாதிபதி வேட்பாளருக்கு 31 இலட்சம் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 11,000 ரூபாவாகவும், சுயேட்சை வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 16,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


மாகாண சபைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 6,000 ரூபாவாகவும், சுயேட்சை வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 11,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »