Our Feeds


Saturday, May 4, 2024

Zameera

ஊடக சுதந்திர குறிகாட்டியின்படி இவ்வருடம் 150 ஆவது இடத்தில் இலங்கை


 எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் ஊடக சுதந்திர குறிகாட்டியின் பிரகாரம் 180 நாடுகளின் வரிசையில் இலங்கை 35.21 புள்ளிகளுடன் 150 இடத்தில் இருக்கின்றது. 

கடந்த ஆண்டு ஊடக சுதந்திர குறிகாட்டியுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

உலக ஊடக சுதந்திர தினத்தை (3) முன்னிட்டு எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பினால் 2024 ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திர குறிகாட்டியை அடிப்படையாகக்கொண்டு வரிசைப்படுத்தப்பட்ட 180 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையில் ஊடக சுதந்திரம் சார்ந்த நெருக்கடிகள் பெருமளவுக்கு 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட யுத்தத்துடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு, ஊடகவியலாளர்கள் பலருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மீறல்கள் தொடர்பில் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை என விசனம் வெளியிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இலங்கையின் ஊடகத்துறையானது அரசியல் தரப்புக்களில் பெரிதும் தங்கியிருப்பதாகவும், இந்நாட்டில் ஊடகத்துறை இன்னமும் அச்சுறுத்தல்மிகு நிலையிலேயே இருப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »