Our Feeds


Wednesday, May 29, 2024

Zameera

மீன்பிடி குறைந்ததால் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு


 மீன் பிடித்தல் குறைவதால், உள்ளூர் சந்தையில் கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகளின் விலை அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.

கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியதால் மீன் விலை உயர்ந்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், மீனவ மற்றும் கடற்படை சமூகங்கள் மறு அறிவித்தல் வரை வெளியில் செல்லவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், உள்ளூர் இறைச்சி விலை   அதிகரித்துள்ளது.   அதன்படி, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் புதிய கோழி  1,080. ரூபாயாகும்

ஃப்ரெஷ் சிக்கன் - ரூ.1,200

கோழி (தோல் இல்லாதது) - ரூ.1,100

உறைந்த கோழி - ரூ.1,100

கறி கோழி - ரூ. 1,100

ஹபேட் - ரூ.1,400

கட் ஆஃப் - ரூ. 600

ஆட்டிறைச்சி - ரூ.3,300

மாட்டிறைச்சி - ரூ.2,500

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »