Our Feeds


Wednesday, May 29, 2024

SHAHNI RAMEES

நான் Dr. ஷாபிக்கு எதிராக எதுவும் கூறவில்லை - விமல் வீரவன்ச

 


வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் நிரபராதியாகவும் இருக்கலாம்

இல்லாமலும் இருக்கலாம். அது இன்னும் முடியாத வழக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.


 


தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


தொடர்ந்தும் தெரிவிக்கையில்;


“.. வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிராக நான் எதுவும் கூறவில்லை. அதாவது குருநாகல் தாய்மார்கள் வழங்கிய முறைப்பாட்டினை குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிக்க, அதனை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நாம் ஊடகங்களுக்கு தெரிவித்தோம்.


கர்ப்பப்பை சர்ச்சையில் நான் எதுவும் எனது கருத்துக்களை கூறவில்லை. முறையான விசாரணையை கோரினேன் அவ்வளவு தான். என்றாலும் ஷாபியின் வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. அவர் இப்போது மீண்டும் சேவையில் இணைந்துள்ளார். அவர் நிரபராதியாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அது எனக்கு தெரியாது..” எனத் தெரிவித்திருந்தார்.


ஷாபி ஷிஹாப்தீன் அண்மையில் தனக்கு இழைக்கப்பட்ட முறைகேடுகளை வைபவமொன்றில் கருத்தாக தெரிவித்திருந்தார். அதனை மேற்கோள் காட்டியே ஊடகவியலாளர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஷாபி ஷிஹாப்தீன் கர்ப்பப்பை சர்ச்சை வெறும் அரசியல் தானே என கேள்வி கேட்க, வியர்க்க சற்றே தடுமாறி நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »