Our Feeds


Saturday, June 15, 2024

SHAHNI RAMEES

சட்டவிரோதமாக நடத்தப்படும் 900 சாரதி பயிற்சி பாடசாலைகள்

 



மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கூற்றுப்படி,

சட்டவிரோதமாக நடத்தப்படும் 900 சாரதி பயிற்சி பாடசாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த பாடசாலைகளை அடுத்த வாரத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.




மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அநுருத்த வீரசிங்க, தனது உள்ளக கணக்கெடுப்பின்படி நாடளாவிய ரீதியில் 1500 சாரதி பயிற்சி பாடசாலைகள் இயங்கி வருவதாகவும் அதில் 600 சாரதி பயிற்சி பாடசாலைகள் மாத்திரமே சட்டரீதியாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனுமதியுடன் இயங்குவதாகவும் தெரிவித்தார்.




கடந்த காலங்களில் ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் சிலர் தாங்களாகவே சாரதி பயிற்சி பாடசாலைகளை ஆரம்பித்து பதிவு செய்த ஓட்டுநர் பயிற்சி பாடசாலைகளை சட்டவிரோதமாக தொடர்பு கொண்டு அவற்றை நடத்தி வருவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.




2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு சாரதி பயிற்சி பாடசாலைகளில் சாரதி பயிற்றுநர்கள் சேர்க்கப்படவில்லை என்றும், அறுநூறு சாரதி பயிற்றுநர்களுக்கு நேற்று (14) உரிமம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »