தரமற்ற மருந்துக்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் தொடர்புடைய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல மற்றும் 3 சந்தேகநபர்களை ஒகஸ்ட் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது இன்று (22) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் (IVIG) குப்பிகளை கொள்வனவு செய்ததில் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Thursday, August 22, 2024
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய உள்ளிட்ட 3 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »