ரஷ்யாவின் கிழக்கு கம்சாட்கா கடற்கரையில் 7.0 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து எரிமலை வெடிப்பு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது பெட்ரோபாவ்லோவ்ஸ்க் - கம்சாட்ஸ்கியிலிருந்து 90 கி.மீ. தொலைவில், பூமிக்கு 50 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரஷியாவின் கம்சட்காவில் சுமார் 181,000 மக்கள் வசிக்கும் கடற்கரை நகரத்தில் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து 450 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஷிவெலுச் எரிமலை வெடித்து சிதறியுள்ளது.
ரஷ்யாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கத்தால் கம்சாட்கா மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
Sunday, August 18, 2024
ரஷ்யாவில் எரிமலை வெடிப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »