இலங்கையில் அரசியல் கட்சிகள் எப்போதும் கட்சித் தலைவரின் பிடியில் இருப்பதால் மக்களுக்காகவும் கட்சிக்காகவும் செய்ய வேண்டிய ஜனநாயக தியாகங்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் பொதுஜன ஐக்கிய முன்னணி அவ்வாறானதல்ல. எனவே பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. என எவரும் எம்முடன் இணைந்து கொள்ளலாம் என நிமல் சிறிபால டி சில்வா அழைப்பு விடுத்தார்.
பொதுஜன ஐக்கிய முன்னணி அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (14) வோட்டஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொதுஜன ஐக்கிய முன்னணியானது நாட்டின் அரசியலை முக்கியமான நிலைக்கு கொண்டு வந்த ஒரு முகாமாகும். பழைய கூட்டணியை நவீன காலத்திற்கு ஏற்றதாக மாற்றி மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. யாப்பினை மாற்றி, சட்ட நிபந்தனைகளை மாற்றி இந்த புதிய கூட்டணியை உருவாக்கினோம்.
இலங்கையில் அரசியல் கட்சிகள் எப்போதும் கட்சித் தலைவரின் பிடியில் இருப்பதால் மக்களுக்காகவும் கட்சிக்காகவும் செய்ய வேண்டிய ஜனநாயக தியாகங்கள் தவிர்க்கப்படுகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சாமானியர்களின் நியாயமான தேவைகளை புரிந்து கொள்ளாததால் கட்சி அரசியல் அழிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உதாரணமாகக் காட்டலாம்.
சுதந்திரக் கட்சி தலைவரால் அழிக்கப்பட்ட போது ஏனைய உறுப்பினர்கள் அரசியலுக்கு வருவதற்கு இந்த ஜனநாயகக் கூட்டணியை உருவாக்க வேண்டியிருந்தது. ஒரு கட்சியை துண்டு துண்டாக பிரித்து அரசியல் செய்ய முடியாது. கடந்த காலங்களில் சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் பல்வேறு குழுக்களுடனும் அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தியது. ஜாதி, மத பேதமின்றி அனைத்து மக்களையும் இணைக்கக்கூடிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
கட்சிகளை சங்கடப்படுத்தாமல் பரந்த அரசியல் தலைமையுடன் கூடிய பரந்த ஜனநாயக உரையாடலை கட்டியெழுப்புவதே இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமாகும். அனைவரும் எம்முடன் இணையலாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 25 வீதமும் மற்ற அனைவருக்கும் 75 வீதமும் இருக்கும் வகையில் இந்தக் கூட்டமைப்பில் ஜனநாயக வெளியை நாங்கள் தயார் செய்தோம்.
எமக்கு ஜனநாயகக் கட்டமைப்பு இருப்பதால் இந்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் எம்முடன் இணைந்து கொள்கின்றனர். பொருளாதாரம், அரசியல், வெளியுறவுக் கொள்கை போன்ற அனைத்துப் பகுதிகள் பற்றிய முடிவுகள் தலைமைக் குழுவின் விவாதத்தின் பின்னரே மக்கள் முன் வருகின்றன.
எங்களுடைய அரசியல் முகாமில் எந்தத் தரத்தில் இருந்தும் யார் வேண்டுமானாலும் உச்சத்துக்கு வரக்கூடிய ஒரு வகையான ஜனநாயகத்தை நாங்கள் பாதுகாத்துள்ளோம். வழமையான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து பொருளாதாரத்தை பலமான இடத்திற்கு உயர்த்தி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த தருணத்தில் வழங்க வேண்டும் என தீர்மானித்துள்ளோம் என்றார்.
Thursday, August 15, 2024
பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதவுகள் திறந்தே இருக்கின்றன - நிமல் அழைப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »