நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவரது தலைமையில் உருவாக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமர் பதவி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கே வழங்கப்படும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
வெற்றி பெறுவதற்கு முன்னரே பதவிகள் தொடர்பில் கட்சிக்குள் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.
இந்தநிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்படுகின்றன.
எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பின்தள்ளும் முயற்சியிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இறங்கியுள்ளது.
எவ்வாறாயினும், புதிய ஆய்வுகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னிலையில் இருப்பதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.