Our Feeds


Tuesday, August 20, 2024

Sri Lanka

குற்றவாளிகளைப் பிடிக்க தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பு போதாது - ஜனாதிபதி!


குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு நாட்டில் தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பு போதாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேலதிகமாக இருக்கின்ற அரச பணியாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் அரச துறையில் தேவைக்கு அதிகமான ஊழியர்கள் இருக்கிறார்கள் அவர்களைத் தொழிலிலிருந்து அகற்றினால் அவர்களுக்கு வருமானம், பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்.

பங்களாதேஷில் நடந்ததைப் போல் போராட்டங்களை முன்னெடுப்பார்கள்.
அப்படியொரு நிலைமை ஏற்படக் கூடாது அவர்களையும் உள்வாங்கிக் கொண்டு நாம் பயணிக்க வேண்டும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »