இலங்கையின் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்ற ஐகானிக் விருது 2024 நிகழ்வில், சிறந்த பெண் விளையாட்டு செய்தி தொகுப்பாளராக திருமதி ஆஷிகா பர்ஸான் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, தயாசிரி ஜெயசேகர மற்றும் வசந்த யாப்பா பண்டார உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ஆஷிகா பர்ஸான், கத்தாரில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற AFC ஆசிய கோப்பை கால்பந்தாட்ட போட்டியில், கத்தாரின் முன்னணி தமிழ் ஊடகமான ஸ்கை தமிழ் சார்பாக ஊடகப் பணியாற்றியதற்காக, இந்த விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.