ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இரண்டு பேர் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
சு.க வின் முன்னாள் இடைக்கால செயலாளர் நியமிக்கப்பட்ட துஷ்மந்த மித்ரபால மற்றும் சுதந்திர கட்சியின் மூத்த பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் ஜனாதிபதி ரனிலுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அங்கஜன் ராமநாதன் எம்.பி யிடம் ShortNews சார்பில் கேட்ட போது அவர் அதனை உறுதிப்படுத்தினார்.