ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளுக்காக 1,358 பஸ்கள் வழங்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய அந்த பஸ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
மேலும் தேர்தல் தொடர்பான பொலிஸ் பணிகளுக்காக 175 பேருந்துகள் வழங்கப்பட உள்ளன.
இதேவேளை, வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக நாளையும் 20 நாளையும் மறுதினமும் (21) விசேட தொலை தூர பஸ் சேவையொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
Thursday, September 19, 2024
தேர்தல் பணிக்காக 1,358 பஸ்கள்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »