இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஒரு பக்கம் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இன்று இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 182 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.