கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் முதல்கட்டமாக திருகோணமலையில் உள்ள 348 பாடசாலைகளுக்கு solar panel வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் மின்சார கட்டணம் செலுத்த இயலாத நிலையில் பல்வேறு பாடசாலைகள் காணப்படுவதாக ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் உள்ள 1124 பாடசாலைகளில் சூரிய மின்சக்தி திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் ஆரம்பித்து வைத்தார். அதன் முதல் கட்டமாக 342 பாடசாலைகளுக்கு ஆளுநரால் solar panel வழங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்த ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பெற்றோர்களும் பாராட்டுக்களையும் நன்றிகளியும் தெரிவித்தனர்.