Our Feeds


Tuesday, September 17, 2024

Zameera

தேர்தல் கடமைக்காக 63,000 பொலிசார்


 ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 63,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்கு எண்ணும் நிலையங்கள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொருளாதார நிலையங்களின் பாதுகாப்பிற்காக இராணுவம் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு உதவியாக 10,000 சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும், நடமாடும் பயணங்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினத்தன்று வாக்களிப்பு நிலையங்களில் எவரேனும் கலவரமாக நடந்து கொண்டால், அதிகூடிய பலத்தை பிரயோகிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »