முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட 75 மில்லியன் ரூபா உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நட்டஈட்டினை செலுத்தி முடித்துள்ளார்.
முழுத் தொகையையும் 8 தவணைகளில் செலுத்தியுள்ள நிலையில் இறுதித் தொகையினை கடந்த ஆகஸ்ட் 30ம் திகதி செலுத்தியுள்ளார்.