Our Feeds


Friday, September 13, 2024

SHAHNI RAMEES

ரணில் தான் வெற்றிபெற முடியாத தேர்தலை வைத்திருக்க மாட்டார் - நசீர் அஹமட்

 

ரணில் விக்கிரமசிங்க தான் வெல்ல முடியாத தேர்தலை வைத்திருக்க மாட்டார் தெளிவான திட்டங்களுடன் இறங்கியுள்ளார் அவரது வெற்றி உறுதி படுத்தப்பட்டுள்ளது என வட மேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தெரிவித்தார்.



மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.



 ஜனாதிபதியின் வெற்றியின் பின்பு சமுர்த்தியில் விடுபட்ட அனைவருக்கும் அஸ்வஸ்மத் திட்ட கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது அரச அதிகாரிகளுக்கான சம்பள அதிகரிப்பு இடம் பெற உள்ளது இவற்றுக்கான நிதிகளை எவ்வாறு பெற்று கொள்ள முடியும் எனும் ஆளுமையும் திட்டமும் அவரிடம் உள்ளது அதனை சர்வதேச சமூகத்திடம் ஏற்றுக் கொள்ளக் கூடிய திறமையும் ரணில் விக்கிரமசிங்கவிடம்தான் உள்ளது.



சஜித் பிரேமதாச IMF இடம் பணத்தை பெறுவதற்கு 5 வருடங்கள் சென்று விடும் அனுரகுமார திசாநாயக்க ஆங்கிலம் படித்து வருவதற்கு இரண்டு முடிந்து விடும் அதற்கிடையில் நாடு குட்டிச்சுவராகிவிடும் இம்முறை பெண்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர். எரிவாயு மின்சாரம் கிடைத்ததே போதும் எரிபொருள் இல்லாமல் பிள்ளைகள் பாடசாலைக்கு போக முடியாமல் இருந்தது மின்சாரம் இல்லாமல் பட்ட அவஸ்தை எல்லாம் போதும்.

தபால் மூல வாக்களிப்பில் அரச உத்தியோகத்தர்கள் அதிகளவிலான வாக்குகளை நாடெங்கிலும் வழங்கியுள்ளனர் இதன் மூலம் சஜித்துக்கும் அனுரைக்கும் இது பெரிய ஏமாற்றம் ஆகும் இதன் மூலம் அவரது வெற்றி உறுதி படுத்தபட்டுள்ளது என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »