ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரசாரங்களும் இன்று (18) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் முடிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபா அபராதமும் ஒரு மாதத்திற்கு குறையாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அமைதியான காலப்பகுதியில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக வேட்பாளர்களை ஊக்குவிக்க முடியாது என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.