விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியமும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன் மூலம் ஏனைய வேட்பாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு, குறித்த மானியம் வழங்கும் ஜனாதிபதியின் தீர்மானத்தை இடைநிறுத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொதுத் தேர்தலின் பின்னர் குறித்த மானியம் வழங்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
Monday, September 30, 2024
ஜனாதிபதியின் தீர்மானம் இடைநிறுத்தம் - தேர்தல் ஆணைக்குழு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »