Our Feeds


Monday, September 16, 2024

Sri Lanka

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய, பிள்ளையான் போன்றோர் கைது செய்யப்படுவார்கள் - சஜித்!


மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தலைமையில் களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட , தொகுதி, பிரதேச , கிராமிய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் ,மாவட்ட இளைஞர் அணி , மகளிர் அணியுடனான விசேட கலந்துரையாடல் ( 15 ) இடம்பெற்றது.

களுதாவளை விளையாட்டு மைதானத்திற்கு ஹெலிகொப்டர் மூலம் வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் மற்றும் களுதாவளை கிராமிய குழு தலைவர் பார்த்தீபன் வரவேற்று , பின்னர் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டனர் , பின் களுவாஞ்சிகுடியில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் பிரச்சினைக்கான தீர்வினையும் , அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வினையும் , ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும் , அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டுவதோடு , பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டும் எனவும் , வாகரை இல்மைற் அகழ்வுடன் தொடர்புடைய காணி திருடர்கள் , சட்ட விரோத மண் கடத்தல்கார கும்பல் உட்பட பல கள்வர்கள் , மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் இவ்வாறான விசமிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் 

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூடி ஏகமனதாக தீர்மானித்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கருத்து தெரிவித்தார்.

இவ்வாறான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உட்பட அனைத்து பிரதேசங்களிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படும் தமிழர்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வையும், சாணக்கியன் தெரிவித்த, முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் தமது அரசாட்சியில்  இதற்கான நீதி நிலைநாட்டப்படும் என்பதனையும் ஐக்கிய மக்கள் கட்சியினுடைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

அதனையும் தாண்டி குறிப்பாக நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் தான் அமைச்சராக கடமையை ஏற்று இருந்த காலப்பகுதியில் முடிக்கப்படாமல் இருக்கின்ற அனைத்து வீட்டுதிட்ட வேலைகள் அனைத்தும் ஒரு மாத கால பகுதிக்குள் நிறைவுறுத்தப்படுவதாகவும் கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அம்பாறையில் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை முதல்வர் சரவணபவன், இலங்கை தமிழரசு கட்சியினுடைய மாவட்ட , தொகுதி, மத்திய , பிரதேச , கிராமிய குழு உறுப்பினர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணி மகளிர் அணி பிரதிநிதிகள் இலங்கை தமிழர் கட்சியினுடைய ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

இதன் போது கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் , கட்சியின் தீர்மானித்திற்கு அமைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைப்பாதாகவும் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »