புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரத்துடன் தொடர்புடைய மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் இரத்மலை திஸ்ஸ கல்லூரியின் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிலையத்தில் பணிபுரிந்த மண்டபத் தலைவர் உட்பட மூவரின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ சமரக்கோன் இன்று (19) தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மண்டபத் தலைவர் உள்ளிட்ட மூவரிடமும் மாகாணக் கல்வித் திணைக்களம் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தது.
பரீட்சை நிலையத்தில் இருந்த உதவி அதிபர் ஒருவராலேயே ஆசிரியர் குழுவிற்கு வினாத்தாள் பகிரப்பட்டதாக தெரியவந்தது.
இதன்படி, அந்த பரீட்சை மண்டபத்தில் பணிபுரிந்த பரீட்சை நிலையத் தலைவர், உதவித் தலைவர் மற்றும் ஆசிரியர் ஒருவரின் சேவை இடைநிறுத்தப்பட்டு அவர்கள் மீது மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
Thursday, September 19, 2024
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் – மூவர் பணிநீக்கம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »