பேக்கரி பொருட்களின் விலையை முடிந்தவரை குறைக்க அனைத்து பேக்கரி உரிமையாளர்களும் நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை விலை குறைப்பின் பயனை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் முட்டையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்குமாறு அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என். கே. ஜெயவர்தன தெரிவித்தார்.